தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தனது சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் எனக் கட்சி வட்டாரத் தகவல்கள் உறுதி செய்கின்றன.
இந்நிலையில், விஜய் தலைமையிலான தவெக, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும், முழுமையான கால அட்டவணை ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
விழாவுக்கான நவீன பிரச்சார பேருந்து தற்போது தவெக தலைமை இடமான பனையூரில் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விஜய் நேரில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்க உள்ள விஜய்: தவெக தேர்தல் பயணம் செப்டம்பர் முதல்
