செப்டம்பர் மாதம் பிசிஓஎஸ் (PCOS) விழிப்புணர்வு மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கருவுறும் வயதிலுள்ள பெண்களில் 10 பேரில் ஒருவரைப் பாதிக்கும் ஒரு பொதுவான மருத்துவ நிலை இது என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
ஆனால், இவ்வளவு பரவலாக இருந்தபோதிலும், 70% வரையிலான பிசிஓஎஸ் பாதிப்புகள் கண்டறியப்படாமல் இருப்பதே இதன் மோசமான பக்கமாகும்.
இந்த நிலையில், இந்தப் பாதிப்பு குறித்து அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.