அதிமுக கட்சியில் அதிருப்தி: இன்று மனம் திறந்து பேசவுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  

Estimated read time 1 min read

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த அதிமுக MLA மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் நிலவும் அதிருப்தியை ஒட்டி இன்று (செப். 5) கோபியில் அவரது நிலைப்பாட்டை வெளிப்படையாக பகிர உள்ளார் என அறிவித்துள்ளார்.
நேற்று கோபி அருகே நடைபெற்ற திருமண மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்ட செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தே.மு.தி.க – பாஜக கூட்டணியில் இருந்து விலகியதைக் குறித்து எழுப்பிய கேள்விக்கு,”அவர் எடுத்த முடிவு அவருடையது. அவரிடம் கேட்பது தான் சரியானது. நான் அதில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை,” என்றார்.

You May Also Like

More From Author