அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும், அதற்காக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட பேச்சு, கட்சிக்குள் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், செங்கோட்டையன் பேச்சை எப்படி எதிர்கொள்வது என ஆலோசிக்க, எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். செங்கோட்டையன் பேச்சு குறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும் எனவும், அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து வரும் நாட்களில் தனித்த முடிவு எடுக்கப்படும் எனவும் அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், அதிமுகவின் உள்நிலை அரசியலில் புதிய திருப்பம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
