தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேறகொண்டுள்ளார். இன்று லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து அது தொடர்பான வீடியோவை பெருமிதத்துடன் வெளியிட்டார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் மூலமாக மொத்தமாக ரூ.13016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தமாக 17813 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. மேலும் ஜெர்மனியில் ரூ.7020 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ரூ.5996 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
மேலும் மொத்தமாக ரூ.13016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதோடு 17813 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.