வங்கதேச தேர்தல்: தாரிக் ரஹ்மான் தலைமையில் பிஎன்பி (BNP) வெற்றியை நோக்கி முன்னேற்றம்  

Estimated read time 1 min read

பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த 13-வது நாடாளுமன்ற தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து தனிப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, மொத்தமுள்ள இடங்களில் 185 தொகுதிகளில் வெற்றி பெற்று பிஎன்பி ஆட்சியை பிடித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியை அமைக்கத் தேவையான குறைந்தபட்ச இடங்கள் 151 என்ற நிலையில், பிஎன்பி 185 இடங்களை கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 56 இடங்களை பிடித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author