ஏர்ஷோ சீனா என அழைக்கப்படும் சீன சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சி வரும் நவம்பர் 12 முதல் 17ஆம் நாள் வரை குவாங்டொங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் நகரில் நடைபெறவுள்ளது.
இவ்வாண்டில் 15ஆவது கண்காட்சியில் சுமார் 47 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1022 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. முந்தைய கண்காட்சியை விட, நடப்பு கண்காட்சியில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு கண்காட்சியாளர்களின் எண்ணிக்கை 104 சதவீதம் அதிகம். அவற்றில், ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், சௌதி அரேபியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள், குழு முறையில் பங்கெடுக்கின்றன.
இவ்வாண்டின் கண்காட்சியில் பல புதிய வரலாற்றுப் பதிவுகள் உருவாக்கப்பட உள்ளன. ஒரே கண்காட்சி மூன்று தளங்களில் நடைபெறும். அவற்றில் ஒன்றான ஜுஹாய் சர்வதேச விமானக் கண்காட்சி மையத்தில் மொத்தம் 13 அரங்குகள் பயன்படுத்தப்படும். உட்புற அரங்கங்களின் பரப்பளவு 1.2லட்சம் சதுரக் கிலோமீட்டரை எட்டி, முதலாவது கண்காட்சியை விட 15 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.