இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன் இடையிலான புதிய திரைப்படம், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வெளியான இப்படத்தின் அறிவிப்பு வீடியோ, அனிருத்தின் அதிரடியான இசைக்காக பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள ‘#AA23 தீம்’ இசை, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் தளங்களில் 10 லட்சம் ரீல்ஸ்களை கடந்து மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஒரு இந்திய திரைப்படத்தின் ‘அறிவிப்பு தீம்’ இவ்வளவு பெரிய ரீல்ஸ் எண்ணிக்கையை பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த சாதனையை முன்னிட்டு, லோகேஷ், அல்லு அர்ஜுனுடன் இருக்கும் ஒரு செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அல்லு அர்ஜுன் -லோகேஷ் கனகராஜ் இணையும் #AA23: வைரலாகும் புதிய செல்பி
