எதிர்வரும் சஷ்டி விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று நவம்பர் 6ஆம் தேதி புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில், நவம்பர் 7ஆம் தேதி காலை 8.30 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
அதேபோல், நவம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 10.15 மணிக்கு திருச்செந்தூர் இருந்து புறப்பட உள்ள சிறப்பு ரயில், நவம்பர் 8ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.