தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை  

Estimated read time 0 min read

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024 டிசம்பரில், அவர் சட்டவிரோதமாக ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி, நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
தென் கொரிய வரலாற்றில் பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்ட முதல் அதிபரான இவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

You May Also Like

More From Author