ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பில்லை என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஆறு பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஒரு இஸ்ரேல் அதிகாரி, “அது நாங்கள் இல்லை,” என்று கூறியுள்ளார்.
தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி இந்த கருத்தை செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.
அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் ஒரு அணையைத் திறந்து வைப்பதற்காக மே 19 அன்று ரைசி அஜர்பைஜானுக்கு சென்றிருந்தார்.