அமெரிக்கா வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக பெண் நியமனம்  

அமெரிக்கா வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அந்நாட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், தனது பிரச்சார மேலாளரான சூசன் சம்மரல் வைல்ஸை இந்த பதவிக்கு நியமனம் செய்துள்ளார்.
வியாழக்கிழமை (நவம்பர் 7) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேடி வான்ஸ் சமூக ஊடகங்களில் வைல்ஸின் நியமனத்தை உறுதிப்படுத்தினார்.
டிரம்பின் பிரச்சாரத்திற்கு அவர் ஒரு முக்கிய சொத்து என்று ஜேடி வான்ஸ் அப்போது பாராட்டினார்.
டிரம்பின் வெற்றிகரமான 2024 பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த வைல்ஸ், 2016 தேர்தலில் இருந்து அவரது நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author