சீனாவில் வசந்த விழா காலத்தில் திரைப்பட வசூல் 250கோடி யுவானுக்கு மேல்

Estimated read time 0 min read

2026ஆம் ஆண்டின் பிப்ரவரி 19ஆம் நாள் முற்பகல் 11:14மணி வரை, சீனாவில் வெளியான திரைப்படங்களின் மொத்த வசூல் 500கோடி யுவானை எட்டியது. இதில் வசந்த விழா காலத்தில் வெளியான திரைப்படங்களின் மொத்த வசூல் 250கோடி யுவானைத் தாண்டியுள்ளது என இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026ஆம் ஆண்டு திரைப்படப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் ஆண்டு எனும் நடவடிக்கையை சீனத் தேசிய திரைப்படப் பணியகம் உள்ளிட்ட வாரியங்கள் பிப்ரவரி 12ஆம் நாள் அறிமுகப்படுத்தின. மேலும் திரையரங்கில்படங்களைப் பார்க்க பார்வையாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதம் முழு ஆண்டும் 120கோடி யுவானுக்கு மேலான மானியங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சீனா யூனியன் பே உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் வேறுபட்ட சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம், திரைப்பட டிக்கெட் விலை குறைவாகவும் பணம் செலுத்தும் முறை மிகவும் வசதியாகவும் உள்ளது.

தவிர, சீனாவின் ஃபுஜியன் மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் வசந்த விழாவின் போது தூதஞ்சல் பணியாளர்கள், தன்னார்வலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற தொழிலாளர்களுக்காக இலவசமாக திரைப்படங்களைப் பார்க்கும் சிறப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author