சீனா “கே-விசாவை” வழங்குவது குறித்து, சீன வெளியுறவுஅமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் செப்டம்பர் 29ஆம் நாள்
கூறுகையில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் சீன-வெளிநாட்டு இளம்
திறமைசாலிகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை
முன்னேற்றும் விதம், சாதாரண விசாவின் கீழ், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு
“கே-விசா” வழங்க சீனா திட்டமிட்டுள்ளது என்றார். இந்த விசாவின்
விண்ணப்பம் பற்றிய தகவல்களை, வெளிநாடுகளுக்கான சீனத் தூதரகங்கள் மற்றும் துணைத்
தூதரகங்கள் விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.