வந்தவாசி, ஏப் 24:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா சிறப்பு உரையரங்கம் நூலக வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு கிளை நூலகர் சத்ய நாராயணன் தலைமை தாங்கினார். பூங்குயில் சிவக்குமார், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டாட்சியர் ஆர். பொன்னுசாமி பங்கேற்று, புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும், நூலகப் பயன்பாட்டின் அவசியம் குறித்தும் விளக்கினார். மேலும் புத்தகங்களை வாசிப்போம்;
மனிதர்களை நேசிப்போம் என்ற கொள்கையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். நிகழ்வில் இரும்பேடு ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு, எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன், முதுகலை ஆசிரியர்கள் பூபாலன், பூவிழி, சமூக ஆர்வலர் மனோஜ் குமார், ஊடகவியலாளர் ஷாகுல் அமீது, மூன்றாம் நிலை நூலகர் ஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புத்தக வாசிப்பு குறித்த பேச்சு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் நூலக அலுவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.