சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் பிப்ரவரி 20ஆம் நாள் சீன அரசவை கொள்கை பற்றிய கூட்டத்தை நடத்தியது.
இதில், உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவது, 2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டை நிதானப்படுத்தும் நோக்கில் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து சீன வணிக அமைச்சகம், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சீனத் தேசியச் சந்தை கண்காணிப்புப் பணியகம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் எடுத்துக்கூறினர்.
2024ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் 12 இலட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டன.
அதோடு, சீனாவில் அந்நிய முதலீட்டின் உண்மை பயன்பாட்டுத் தொகை, 20 இலட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானாகும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.