உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்துக்கான நிலைப்பாட்டை விவரிக்கும் சீனாவின் முதல் ஆவணம்

தற்போதைய நிலைமையில் உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்துக்கான மீதான சீனாவின் நிலைப்பாடு தொடர்பான ஆவணத்தை சீனா அண்மையில் உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிதுள்ளது என்று சீன வணிக அமைச்சகம் 19ஆம் நாள் தகவல் வெளியிட்டது. உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம் தொடங்கிய பிறகு சீனா தனது நிலைப்பாட்டை பன்முகங்களிலும் விவரிக்கும் முதலாவது கொள்கை ஆவணம் இதுவாகும்.

வணிக அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், தற்போது பலதரப்பு வர்த்தக அமைப்பு எதிர்கொள்ளும் கடும் சவால்கள் மற்றும் வளர்ச்சிக்கான தேவையைக் கருத்தில் கொண்டு, தனது கோரிக்கை மற்றும் இதர உறுப்பினர்களின் அக்கறையின் அடிப்படையில் சீனா உலக வர்த்தக அமைப்பிடம் இந்த ஆவணத்தை வழங்கியதாகத் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையில் உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்துக்கான சீனாவின் பொது கோட்பாடு மற்றும் முன்மொழிவுகள் இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தின் உலக மயமாக்கலை ஆதரித்து பலதரப்பு வர்த்தக அமைப்பை பேணிக்காப்பதற்கான சீனாவின் ஆக்கப்பூர்வமான மனநிலையும் இச்சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கியத்துவமும் இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வளர்ச்சியை சீர்திருத்தத்தின் மையமாக கொண்டு வளரும் உறுப்பினர்கள் டிஜிட்டல் பொருளாதாரம், பசுமை மாற்றம் மற்றும் ஏஐ கொண்டு வரும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கைப்பற்ற உதவ வேண்டும் என்றும், உறுப்பினர்களின் வேறுபட்ட பொருளாதார அமைப்பு முறைகள் மற்றும் வளர்ச்சி கட்டங்களை மதித்து, நியாயமான போட்டிக்கான ஒத்த கருத்தைத் தேடி, தொழில்களின் வளர்ச்சிக்கு பொருத்தமான சர்வதேச வர்த்தக விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

You May Also Like

More From Author