ஒளியியல் தொடர்பு மற்றும் 6ஜி துறையில் சீனா முன்னேற்றம்

சீன அறிவியலாளர்கள் சமீபத்தில் ஒளியியல் தொடர்பு மற்றும் 6ஜி துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் ஒளியிழை தொடர்பு மற்றும் கம்பியில்லா தொடர்பு முறைமைகளிடையே வலையமைப்பு கடந்த ஒருங்கிணைப்பை அவர்கள் முதலில் நனவாக்கியுள்ளனர். அவர்கள் தற்சார்பாக ஆராய்ந்து உருவாக்கும் ஒளியிழை-கம்பியில்லா இணையத்தின் ஒருங்கிணைந்த தொடர்பு முறைமையின் தரவு பரிமாற்ற வேகம் வரலாற்றில் புதிய பதிவை எட்டியுள்ளது. இந்தச் சாதனை 19ஆம் நாள் நேட்சார் இதழின் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டது.

அலைவரிசை அகலத்தின் இடைவெளியை இந்த புதிய முறைமை தீர்த்துள்ளது என்று தொடர்புடைய ஆய்வுக்குப் பொறுப்பான ஆசிரியர் வாங் சிங்ஜுன் கூறினார். மேலும், ஒளியிழை தொடர்பு மற்றும் கம்பியில்லா தொடர்பு ஆகிய இரட்டை முறை பரிமாற்றத்துக்கும் ஆதரவளிக்கும் இந்த முறைமை, தலையீட்டு தடுப்புத் திறனையும் பெரிதும் உயர்த்தியுள்ளது என்றும், தரவு பரிமாற்றத்துக்கான அதன் அலைவரிசை அகலம் தற்போதுள்ள 5ஜி இணையத்தை விட 10 மடங்கிற்கு மேல் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒளியியல் மற்றும் டெராஹெட்ஸ் தொடர்பு ஒருங்கிணைந்த முறைமையின் முன்னேற்றத்துக்கு இது முக்கிய பங்காற்றியுள்ளது என்று நேட்சார் இதழின் மதிப்பாய்வு ஆசிரியர் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author