ஆய்வு மற்றும் வளர்ச்சி துறையில் சீன மத்திய அரசு சார் நிறுவனங்களின் முதலீடு அதிகம்

சீன அரசவையின் அரசு சொத்துகள் கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, சீன மத்திய அரசு சார் நிறுவனங்களின் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான முதலீடு தொடர்ந்து 4ஆவது ஆண்டாக 1 லட்சம் கோடி யுவானைத் தாண்டி, 2025ஆம் ஆண்டில் 1.1 லட்சம் கோடி யுவானை எட்டியுள்ளது.

2025ஆம் ஆண்டில் மத்திய அரசு சார் நிறுவனங்களின் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான முதலீட்டின் செறிவு அளவு 2.86 விழுக்காட்டை எட்டியது. அவை 14.4 லட்சம் ஆய்வாளர்களைக் கொண்டு, மொத்தம் 474 தேசிய அளவிலான ஆய்வு மற்றும் வளர்ச்சி தளங்களை நிறுவியுள்ளன. அவற்றின் உற்பத்தி, கல்வி மற்றும் ஆராய்ச்சியின் ஒருங்கிணைந்த புத்தாக்கத்தின் மூலம் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளின் பயன்பாட்டை விரிவாக்கும் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

2026ஆம் ஆண்டில், உயர்தர அறிவியல் தொழில்நுட்ப விநியோகத்தை அதிகரிப்பது, உயர் திறனுடன் சாதனைகளின் மாற்றத்தை முன்னேற்றுவது, உயர் நிலை புத்தாக்க சூழ்நிலையை உருவாக்குவது ஆகிய துறைகளில் மத்திய அரசு சார் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது.

 

You May Also Like

More From Author