தைவான் விவகாரத்தில் ஜப்பான் தலையிடுவதற்கு சீனா கடும் எதிர்ப்பு

ஜப்பான் எந்த வடிவ சாக்குப்போக்கிலும் கூட்டு தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி தைவான் விவகாரத்தில் தலையீடு செய்தால், அது சீனாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு செயலாகவே கருதப்படும் என்றும், சீனா இதற்கு வலுவான பதிலடி கொடுக்கும் என்றும் ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஃபூ சொங் 18ஆம் நாள் தெரிவித்தார்.

ஐ.நா சாசனம் மற்றும் ஐ.நாவின் பங்கை வலுப்படுத்துதல் குறித்த சிறப்புக் குழுவின் 2026 அமர்வின் பொது விவாதத்தில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தைவான் சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். தைவான் விவகாரம் சீனாவின் உள் விவகாரமாகும். மற்ற நாடுகளுக்கு இதில் தலையிட உரிமை இல்லை, தற்காப்பு எனும் சாக்குப்போக்கில் இராணுவ ரீதியாகத் தலையிடும் உரிமையும் இல்லை என்று வலியுறுத்தினார். மேலும், பல்வேறு நாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு அளித்தல், உள்விவகாரத்தில் தலையிடாது போன்ற ஐ.நா சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஜப்பானிய தலைவரின் தவறான கூற்றுகள் மீறுவதாக உள்ளன. இது 2ஆவது உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கிற்கு கடும் ஆத்திரமூட்டலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author