சீனாவின் மனித உருவ ரோபோக்கள் தொழில் நுட்பம் பற்றிய உலகளாவிய கருத்து கணிப்பு

சீனாவின் மனித உருவ ரோபோக்கள் தொழில் நுட்பம் பற்றிய உலகளாவிய கருத்து கணிப்பு

சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழா கலைநிகழ்ச்சியில் மனித உருவ ரோபோக்கள் வழங்கிய வூஷு நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. சீனாவின் சி.ஜி.டி.என். ஊடகம் நடத்திய உலகளாவிய கருத்து கணிப்பில், சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழா கலைநிகழ்ச்சியானது சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைக் காண்பிக்கும் ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது என்றும், வசந்தவிழா கலைநிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்ட மனித உருவ ரோபோக்கள், சீனாவின் புதிய தரமான உற்பத்தி சக்திகளின் விரைவான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன என்றும் 94 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

வசந்தவிழா கலைநிகழ்ச்சியின் அரங்கில் மனித உருவ ரோபோக்களின் விரைவான வளர்ச்சி, சீனாவின் ரோபாட்டிக்ஸ் மற்றும் உட்பொதிந்த நுண்ணறிவு தொழில்களின் விரைவான முன்னேற்றத்தை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் காட்டியுள்ளது. இது சீனத் தொழில்நுட்ப புத்தாக்கத்தின் எதிர்காலம் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் நடைமுறை பயன்பாட்டில் சீனா உலகின் முன்னணியில் இருப்பதாக 88.2 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

2025ஆம் ஆண்டில், சீனா 7இலட்சத்து 73ஆயிரம் ரோபோக்களை உற்பத்தி செய்தது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 28விழுக்காடு அதிகரித்து, ஒரு புதிய சாதனையைப் படைத்தது. 15வது ஐந்தாண்டுத் திட்டவரைவில் உட்பொதிந்த நுண்ணறிவு எதிர்காலத் தொழிலாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப திறன்களில் மேலும் முன்னேற்றங்களை எதிர்பார்ப்பதாக 87.9 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author