இந்தியாவின் புது தில்லி நகரில் நவம்பர் 10ஆம் நாளிரவு வாகன குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் 11ஆம் நாள் கூறுகையில், இந்தச் சம்பவத்துக்கு அதிர்ச்சி அடைந்தோம் என்றார். மேலும், இதில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கிறோம். காயமுற்றவர்கள் வெகுவிரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
