14ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தின் போது, சீனாவின் வல்லரசு கட்டுமானத்துக்கு அதிகமான திறமைசாலிகளை உருவாக்கும் வகையில் சீனாவில் மிகப் பெரிய அளவிலான உயர் தரக் கல்வி அமைப்புமுறை உருவாக்கப்பட்டது.
பள்ளியில் சேர்வதற்குரிய முந்தைய இலவசக் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டதில், இவ்வாண்டில் இலையுதிர்காலத்தில் மட்டும் சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் மக்கள் பயன் பெற்றுள்ளனர், மேலும், தேசியளவில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் கட்டாயக் கல்வியில் சேரும் விகிதம் 97 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
அதோடு, அடிப்படைக் கல்வியில் பலவீனமாக உள்ள பகுதிகளுக்கு சீனா தொடர்ந்து நிதியுதவியை வழங்கி வருகின்றது. 14வது ஐந்தாண்டுத் திட்டக்காலம் முதல் தற்போது வரை, கல்வியின் பொது சேவை சலுகை கொள்கை மூலம் மேலதிகமான மக்களுக்கு உயர் தர சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையில், பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயிரி அறிவியல் தொழில் நுட்பம், குவாண்டம் அறிவியல் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு முதலிய துறைகளில் தற்சார்பு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
தத்துவம் அறிவியல் மற்றும் பண்பாட்டுக் கலை துறைகள் தொடர்ந்து வளர்ந்து சிறந்த சாதனைகளைப் புரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
