துரந்தர் படத்தை பார்த்த பின்லாந்து அதிபர்

Estimated read time 0 min read

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்த பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், தான் இந்தியா வருவதற்கு முன்பே ரன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படத்தைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

தனது மகனின் பரிந்துரையின் பேரில் இந்தப் படத்தைப் பார்த்ததாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தைச் சித்தரிக்கும் விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் 2025 இல் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம், துரந்தர்: தி ரிவெஞ்ச் என்ற பெயரில் வெளியாக உள்ளது.
இப்படம் மார்ச் 19, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

மார்ச் 18 ஆம் தேதியே இப்படத்தின் பெய்ட் பிரிவியூ காட்சிகள் திரையிடப்பட உள்ளன.
இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

You May Also Like

More From Author