வாழை, கொட்டுக்காளி படங்களின் முதல்நாள் வசூல் நிலவரம்  

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) வாழை மற்றும் கொட்டுக்காளி என இரண்டு தமிழ் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியான நிலையில், விமர்சன ரீதியாக இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வசூல் ரீதியாக எந்த படம் முன்னிலையில் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அசுரன், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களைக் கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற படம் வெளியாகியுள்ளது.
சிறுவர்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு நெல்லை மாவட்ட பின்புலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பெல் நடித்த கொட்டுக்காளி படம் வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

You May Also Like

More From Author