சீன-ஜெர்மனி பொருளாதார ஆலோசகர் கமிட்டிக் கூட்டத்தில் லீச்சியாங் பங்கெடுப்பு

Estimated read time 1 min read

சீன தலைமையமைச்சர் லீச்சியாங், சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகிய இருவரும், 25ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீன-ஜெர்மனி பொருளாதார ஆலோசகர் கமிட்டிக் கூட்டத்தில் கூட்டாகக் கலந்துகொண்டனர். இதில் 60க்கும் மேலான சீன-ஜெர்மன் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கெடுத்தனர்.

அப்போது லீச்சியாங் கூறுகையில், உலகப் பொருளாதாரத்தில் நிதானமற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணிகள் அதிகரித்துள்ளன. சீனாவும் ஜெர்மனியும் உலகளவில் பெரிய நாடுகளாகும். இவ்விரு நாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்புகளின் மூலம், தத்தமது வளர்ச்சி வாய்ப்புகளை விரிவாக்கி, உலகப் பொருளாதாரத்திற்கு உந்து ஆற்றலையும்  கொண்டு வரும் என்றார்.

பிரீட்ரிக் மெர்ஸ் கூறுகையில், ஜெர்மனியும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று முக்கியப் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக் கூட்டாளிகளாகும். இரு தரப்புகளுக்கிடையிலானப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு அதிகமான உயிர் ஆற்றலைக் கொண்டுள்ளதோடு, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் விரைவுபடுத்தியுள்ளது. சீனாவுடன் இணைந்து, வாகனம், வேதியியல் தொழில் துறை, இயந்திர சாதனம், புதுப்பிக்கவல்ல எரியாற்றல், எண்ணியல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, மேலதிகமான சீன தொழில் நிறுவனங்கள் ஜெர்மனியில் தொழில் நுடத்துவதை வரவேற்கின்றோம் என்றார்.

You May Also Like

More From Author