பெய்ஜிங்-தியன்ஜின்-ஹேபெய் பிரதேசக் கூட்டு வளர்ச்சிக்கான சாதனைகள்

Estimated read time 1 min read

சீனாவின் பெய்ஜிங்-தியன்ஜின்-ஹேபெய் பிரதேசக் கூட்டு வளர்ச்சி என்ற கொள்கை நடைமுறைக்கு வந்த கடந்த 12 ஆண்டுகளில் இப்பிரதேசத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை 2014ஆம் ஆண்டில் இருந்த 3 லட்சத்து 74 ஆயிரம் கோடி யுவானிலிருந்து 2025ஆம் ஆண்டில் 4 லட்சத்து 70 ஆயிரம் கோடி யுவானாக உயர்ந்துள்ளது. அதன் அதிகரிப்பு விகிதம் 25.7 விழுக்காடாகும்.

ஏற்றுமதித் துறையில், கடந்த 12 ஆண்டுகளில் வாகனங்களின் ஏற்றுமதி அளவு 6 மடங்கு அதிகரித்துள்ளது. இறக்குமதித் துறையில், கச்சா எண்ணெய் மற்றும் இயந்திர மின் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி அளவு, முதல் 2 இடங்களை வகிக்கின்றன. 2025ஆம் ஆண்டு, இந்த இரு வகைப் பொருட்களின் மொத்த இறக்குமதித் தொகை, பெய்ஜிங்-தியன்ஜின்-ஹேபெய் பிரதேசத்தின் மொத்த இறக்குமதித் தொகையில் 54.1 விழுக்காட்டை வகித்துள்ளது.

மேலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஆசியான் நாடுகள், இப்பிரதேசத்தின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாகும். தவிரவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பங்கெடுக்கின்ற நாடுகளுடனான இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை, 2014ஆம் ஆண்டில் இருந்த 2 இலட்சத்து 14 ஆயிரம் கோடி யுவானிலிருந்து 2025ஆம் ஆண்டில் இருந்த 2 இலட்சத்து 76 ஆயிரம் கோடி யுவானாக உயர்ந்துள்ளது. அதன் அதிகரிப்பு விகிதம் 29 விழுக்காடாகும்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author