சீர்திருத்தத்தை ஆழமாக்குவது பற்றிய ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், மே 23ஆம் நாள் சான்தொங் மாநிலத்தின் ஜீநான் நகரில், தொழில் நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களின் கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார்.


சோஷலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் மாபெரும் இலக்கு, சீன நவீனமயமாக்கத்தின் மூலம், வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசிய மறுமலர்ச்சியைப் பன்முகங்களிலும் முன்னேற்றும் முக்கிய கடமை ஆகியவை, கட்சியின் 20வது தேசிய மாநாட்டில் உறுதி செய்யப்பட்டன.

சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவதில், சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


மேலும், சீர்திருத்தம், வளர்ச்சியின் இயக்காற்றலாகும். சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கும் வகையில், சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச அமைப்பு முறையை மேம்படுத்தி, நாட்டின் மேலாண்மை அமைப்பு முறை மற்றும் திறனின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது என்ற பொது இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும், சீனாவின் அடிப்படை பொருளாதார அமைப்பு முறையை வளர்த்து, உயர்நிலை சோஷலிச சந்தை பொருளாதார அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.


அவர் மேலும் கூறியதாவது, இனிமையான வாழ்க்கையின் மீதான பொது மக்களின் எதிர்பார்ப்பு, நமது இலக்காகும். மக்களின் ஒட்டுமொத்த நலன், அடிப்படை நலன், நீண்டகால நலன் ஆகியவற்றுக்கிணங்க சீர்திருத்தத்தை முன்னேற்ற வேண்டும். மேலும், நேர்மையான கோட்பாடுகளின் அடிப்படையில் புத்தாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author