சென்னை விமான நிலையத்தில், ரூ.35 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ போதைப்பொருளை கடத்த முயன்றதாக கூறப்படும் வழக்கில் ஒரு பாலிவுட் துணை நடிகர், சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் புலனாய்வு துறையினர் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அப்போது, பாலிவுட்டில் வெளியான ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தில் துணை நடிகராக நடித்த ஒருவரிடமும் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்; பாலிவுட் நடிகர் கைது
