2025இல் சீன கப்பல் கட்டும் துறையின் சர்வதேச சந்தை பங்கீடு முன்னணி

Estimated read time 0 min read

2025ஆம் ஆண்டில் சீனாவின் கப்பல் கட்டும் பணிக்கான 3 முக்கிய குறியீடுகள் சர்வதேச சந்தை பங்கீட்டில் தொடர்ந்து 16ஆவது ஆண்டாக உலகின் முன்னணியில் உள்ளன என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிப்ரவரி முதல் நாள் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

புள்ளிவிவரங்களின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் கப்பல் கட்டும் பணி நிறைவு அளவு, 5 கோடியே 36 லட்சத்து 90 ஆயிரம் டெட்வெயிட் டன்னேஜ் அளவை எட்டி, முந்தைய ஆண்டை விட 11.4 விழுக்காடு அதிகரித்தது. இது உலகின் மொத்தத்தில் 56.1 விழுக்காடு வகித்தது. கப்பல் கட்டுமானத்தின் புதிய ஆர்டர் அளவு 10 கோடியே 78 லட்சத்து 20 ஆயிரம் டெட்வெயிட் டன்னேஜ் அளவுடன் உலகில் 69 விழுக்காடு வகித்தது.

கடந்த டிசம்பர் மாத இறுதிவரை, கையடக்க ஆர்டர் அளவு 31.5 விழுக்காடு அதிகரிப்புடன் 27 கோடியே 44 லட்சத்து 20 ஆயிரம் டெட்வெயிட் டன்னேஜ் அளவை எட்டி, உலகின் மொத்தத்தில் 66.8 விழுக்காடு வகித்தது.

You May Also Like

More From Author