18ஆவது இமயமலை பண்பாட்டுச் சுற்றுலா விழா ஜுன் 18ஆம் நாளிரவு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரிகாசே நகரில் துவங்கியது.
சுமார் 400 நடிகர்களும், பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த 3000 ஊழியர்கள் மற்றும் பொது மக்களும் இவ்விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தேசிய நிலை வரலாற்று மற்றும் பண்பாட்டுச் சிறப்புமிக்க நகரான ரிகாசேவில், அழகான இயற்கைக் காட்சிகளைத் தவிர, வண்ணமயமான நாட்டுப்புற பழக்கவழக்கங்கள், பழமையான கோயில்கள், தலைசிறந்த கல் சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் ஆகியவையும் காணப்படுகின்றன.
ஜுன் 18 முதல் 25ஆம் நாள் வரை, முதலீடு ஊக்குவிப்பு கூட்டம், சுற்றுலா சந்தை முன்னேற்ற கூட்டம், பொருள் சாரா பண்பாட்டு பாரம்பரிய நடனக் கலை நிகழ்ச்சி, குதிரை போட்டி, திபெத்திய நாடகப் போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இந்நகரில் நடைபெறுகின்றன.