சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரில் அமைந்துள்ள “கிராண்ட் பஜார்” என்னும் சுற்றுலா தலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பெரிய சந்தையாகவும் அமைந்துள்ள இந்த சுற்றுலா தலத்தில் , உள்ளூர் உலர் பழங்கள், பாரம்பரிய இசைக் கருவிகள், கைவினை பொருட்கள் முதலிய பல்வகை சிறப்புப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. பல்வேறு இடங்களிலிருந்து இங்கு சுற்றுலா வந்த பயணிகள் இச்சந்தையில் பொருட்களை வாங்குவது மட்டுமல்லாமல், இங்குள்ள பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் அனுபவித்து கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளாக, இந்தப் பெருஞ்சந்தையில் “சுற்றுலா மற்றஉம் பண்பாடு பிளஸ் ”என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சி மூலம், அருவமான கலாச்சார பாரம்பரியங்களின் கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள், நாட்டுப்புற பழக்க வழக்கங்களின் அனுபவங்கள் உள்ளிட்ட புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ தரப்புகளின்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், கிராண்ட் பஜார்க்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 40 லட்சத்து 20 ஆயிரத்தை எட்டியது. இது முந்தை ஆண்டை விட 7.8 சதவீதம் அதிகம். இந்தப் பெருஞ்சந்தை, தற்போது சின்ஜியாங் சுற்றுலா மற்றும் நுகர்வுத் துறையின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறியுள்ளது. பாரம்பரியமும் நவீனமும் கலந்த இந்தப் பெருஞ்சந்தை, உலகத்துக்கு உண்மையான மற்றும் வண்ணமயமான சின்ஜியாங்கை எடுத்துக்காட்டுகிறது.
