சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணியில் முக்கியக் கடமைகள்

Estimated read time 1 min read

 

2026ஆம் ஆண்டு, சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணியில், விண்வெளி நிலையத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி, மனிதரை ஏற்றிச்செல்லும் சந்திர பண்டல ஆய்வு ஆகிய இரு கடமைகள் முன்னேற்றப்படும்.

இவ்வாண்டு, 2 முறை மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணம், 1 முறை சரக்கு விண்கலம் வினியோகப் பயணம் ஆகியவற்றைச் செயல்படுத்தச் சீனா திட்டமிட்டுள்ளது. அதோடு, இவ்வாண்டு ஹாங்காங் மற்றும் மக்கௌவைச் சேர்ந்த விண்வெளிவீரர்கள், விண்வெளி நிலையத்துக்குப் பயணப் பணியை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், ஷென்சோ 23 எனும் விண்கலத்தைச் சேர்ந்த விண்வெளிவீரர் ஒருவர், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கி பணியாற்றும் சோதனையையும் மேற்கொள்ளவுள்ளார்.

தவிரவும், 2030ஆம் ஆண்டுக்குள் சீனர்கள் முதன்முறையாக சந்திரனில் தரையிறங்குதல் என்ற இலக்கை நனவாக்கும் விதம், 2026ஆம் ஆண்டு, வென்ச்சாங் செயற்கை கோள் ஏவுத் தளத்தில் இருந்து மேற்கொள்ளப்படவுள்ள சந்திரப் பயணத்திற்கான வசதிகள் மற்றும் உபகரணங்களின் கட்டுமானமும், அளவிட்டு கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு, தரையிறங்கும் தளம் உள்ளிட்ட ஆதரவு அமைப்புகளின் கட்டுமானமும் பன்முகங்களிலும் முன்னேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author