சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தைச் சேர்ந்த சேவைத் துறை ஆய்வு மையமும், சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனமும் மார்ச் 31ஆம் நாள் வெளியிட்ட தரவுகளில், மார்ச் திங்களில், சீன ஆக்கத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு 50.5 விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளது. இது, கடந்த திங்களில் இருந்ததை விட 0.3 சதவீத புள்ளிகள் அதிகரித்து நிதானமாக மீட்சியடைந்துள்ளது.
சாதன ஆக்கத் தொழில் துறை, உயர் தொழில் நுட்ப ஆக்கத் தொழில் துறை, நுகர்வு பொருட்கள் துறை ஆகியவற்றின் கொள்முதல் மேலாளர் குறியீடு முறையே 52 விழுக்காடு, 52.3 விழுக்காடு மற்றும் 50 விழுக்காடாக விளங்குகிறன.
சந்தை மீது ஆக்கத் தொழில் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக நம்பிக்கை கொண்டிருக்கின்றன. ரெயில், கப்பல், விண்வெளி சாதனங்கள், மின்சார இயந்திரம் உள்ளிட்ட தொழில் துறைகளின் உற்பத்தி மற்றும் இயக்க நடவடிக்கை பற்றிய திட்டமிட்ட குறியீடு 60 விழுக்காட்டிற்கு மேலாகும்.