‘ரஷ்யா, சீனாவுடன் சேர்த்து பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைகளை தயார் செய்கிறது’  

Estimated read time 0 min read

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவரான துளசி கப்பார்ட், உலக நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வளர்ந்து வரும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தானையும் மிக முக்கியமான அணுசக்தி அச்சுறுத்தலாக அவர் பட்டியலிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி உச்சிமாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், டொனால்ட் ட்ரம்ப்பை “அமைதி விரும்பி” என்றும் “தெற்காசியாவின் இரட்சகர்” என்றும் புகழ்ந்து பேசியிருந்தார்.
ஆனால், அத்தகைய புகழ்ச்சிகளுக்கு மத்தியிலும், பாகிஸ்தானை ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே அமெரிக்க உளவுத்துறை பார்ப்பதை துளசி கப்பார்ட்டின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author