சீன-ஜெர்மனி உறவு வளர்ச்சியின் புதிய நிலைமை

ஜெர்மனியின் தலைமையமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸ், குதிரை ஆண்டில் சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவராவர். இப்பயணத்தின்போது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அவருடன் சந்திப்பு நடத்தினார்.

பசுமையான வளர்ச்சி முறை மாற்றம், சுங்கத் துறை, விளையாட்டு, ஊடகங்கள் உள்ளிட்ட துறைகள் சார்ந்த பல உடன்படிக்கைகளில் இரு நாடுகள் கையொப்பமிட்டன. மெர்ஸ் கூறுகையில், சீனாவுடன் ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்கி, பரஸ்பர நலன் மற்றும் சலுகை வழங்குவதை நனவாக்கி, கூட்டு வளர்ச்சியடைய ஜெர்மனி விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஜெர்மனியின் விர்ட்ஷாஃப்ட்ஸ்வோச்(Wirtschaftswoche)என்னும் இணையத்தளத்தில் வெளியிட்ட கட்டுரையில், முன்பு, சீனாவின் மீது ஜெர்மனி ஆக்கப்பூர்வமற்ற கொள்கையை மேற்கொண்டது. ஆனால், தற்போது, ஜெர்மனியின் நெடுநோக்கு கூட்டாளி நாடான சீனாவின் முக்கியத்துவத்தை மெர்ஸ் அரசு வலியுறுத்தியதோடு, ஜெர்மனியில் சீனா முதலீட்டை விரிவுப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய பொருளாதாரச் சமூகமாக ஜெர்மனி திகழ்கிறது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சீனாவில் அதிக பயணம் மேற்கொள்ளும் போக்கை, மெர்ஸின் சீனப் பயணம் தொடர்கிறது. அது, சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவில் தலைமைப் பங்கு வகிக்கின்றது.

சீன-ஜெர்மனி தலைவர்கள் பெய்ஜிங்கில் எட்டியுள்ள ஒத்தக் கருத்துக்கள், புத்தாண்டில் சீன-ஜெர்மனி ஒத்துழைப்புக்குச் சிறந்த துவக்கத்தை வழங்கியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author