சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அம்மைச்சருமான வாங்யீ மார்ச் 12ம் நாள் எகிப்து வெளியுறவு அமைச்சர் அப்டெல்லாடியுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
அப்போது அப்டெல்லாடி, பிராந்திய நிலைமை மற்றும் எகிப்தின் நிலைப்பாட்டை அறிமுகம் செய்து, தற்போதைய போர் மீதான கவலையைத் தெரிவித்தார். அதோடு, பிராந்திய நிலைமையைத் தணிவுப்படுத்தும் வகையில் சீனாவுடன் இணைந்து நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
எகிப்து உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் தொடர்பை நிலைநிறுத்தி, அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு தொடர்ந்து ஆக்கமுள்ள பங்காற்ற சீனா பாடுபடும் என்று வாங்யீ கூறினார்.
