மோடி போன் செய்யவில்லை, ஒப்பந்தம் நடக்கவில்லை! அமெரிக்க வர்த்தக செயலாளர் அதிரடி தகவல்  

Estimated read time 0 min read

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாததற்கு காரணம், இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்பு கொள்ளாததே என்று அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த போட்காஸ்ட் பேட்டி ஒன்றில், சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகளின் பின்னணி குறித்த பல தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
லட்னிக் கூற்றுப்படி, 2025 ஜூலை மாதத்தில் பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
“அதிபர் டிரம்ப் நேரடி தொடர்பில் இருக்கும்போதே இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும். ஆனால், பிரதமர் மோடி அதிபரை தொடர்பு கொள்ளத் தயக்கம் காட்டினார். அந்தச் சமயம் தவறியதால், அடுத்தடுத்த வாரங்களில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தங்களை அறிவித்தது”என்றார்.

You May Also Like

More From Author