பிரதமர் மோடியின் தமிழகம், புதுச்சேரி பயணம்: முழு கால அட்டவணை  

Estimated read time 1 min read

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 1, 2026 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, சுமார் 7,100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு சென்னை வந்தடையும் பிரதமர், மார்ச் 1 அன்று காலை 11:45 மணியளவில் புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.
அங்கு சுமார் 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதியம் 3:00 மணியளவில் மதுரை வந்தடையும் பிரதமர், அங்கு 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author