ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஜம்மு-காஷ்மீரின் நிலவரங்களைக் கருத்தில் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைச் சுட்டிக்காட்டிய இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, “பஹல்காமில் என்ன நடந்தது என்பதை நீங்கள் புறக்கணிக்க முடியாது” என்று கூறியது.
ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்
