தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் ஜூலை 22ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததுடன், சில இடங்களில் 2 டிகிரிவரை அதிகரித்துள்ளது.
பல பகுதிகளில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரிவரை அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை (சுமார் 40.5°C) பதிவாகியுள்ளது.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
