ஏப்ரல் முதல் நாள், சீன-இந்தியத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டுறவின் வளர்ச்சி குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் ஒன்றாம் நாள் கூறுகையில், சீனா மற்றும் இந்தியா, பெரும் வளரும் நாடுகளாகவும், உலகத்தின் தென் பகுதியிலுள்ள முக்கிய நாடுகளாகவும் திகழ்கின்றன. இரு நாடுகள் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, கூட்டாக வளர்ப்பது, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது என்பதை, இரு நாட்டுறவின் வளர்ச்சிப் போக்கு எடுத்துக்காட்டியுள்ளது என்றார்.
மேலும், இந்தியாவுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்களின் வழிகாட்டலில், தொலைநோக்கு பார்வையுடன் இரு நாட்டுறவை கையாள சீனா விரும்புவதாகவும், இரு நாட்டுத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, இரு நாடுகளுக்கிடையிலான ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, பல்வேறு துறைகளிலுள்ள பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சீன-இந்திய எல்லை பகுதியின் அமைதியைக் கூட்டாகப் பேணிக்காத்து, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.