ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி..!

Estimated read time 0 min read

ஆந்திர காக்கிநாடா மாவட்டம், வேட்லபாலம் கிராமத்தில் உள்ள சூர்யஸ்ரீ பயர் ஒர்க்ஸ் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் 35 பேர் பணி செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் திடிரென பயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயணைக்கும் பணி நடந்து வருகிறது.முதற்கட்ட தகவலின்படி 20 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் உடல் கருகி அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சுமார் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.ரசாயனக் கலவையின் போது ஏற்பட்ட உராய்வு அல்லது மின் கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெடிவிபத்தின் சத்தம் 5 கி.மீ தூரம் வரை கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

More From Author