செசல் அரசுத் தலைவர் சி.எம்.ஜிக்குப் பேட்டி

Estimated read time 1 min read

சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், செசல் நம்பத்தக்க கூட்டாளியாக சீனா திகழ்கிறது. இரு தரப்பும், எண்ணியல் பொருளாதாரம், பசுமை வளர்ச்சி, மானிடப் பரிமாற்றம் முதலிய பல துறைகளில் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த மனித குலத்துக்கான பொது எதிர்காலம் சிந்தனை மற்றும் ஒரு தொகுதி முன்மொழிவுகளுக்கும், ஆப்பிரிக்காவுடன் சீனா நேர்மையான முறையில் பழகும் கொள்கைக்கும் பாராட்டு தெரிவித்த அவர், சீனாவுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழமாக்கி, சீனாவுடன் இணைந்து இரு நாட்டுறவை சிறந்த எதிர்காலம் நோக்கி முன்னெடுக்க விருப்பம் தெரிவித்தார்.

 

 

You May Also Like

More From Author