சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் 5ஆவது முழு அமர்வு ஜனவரி 12ஆம் நாள் முதல் 14ஆம் நாள் வரை, பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இந்த முழு அமர்வுக்கான பொது அறிக்கை 14ஆம் நாள் வெளியிடப்பட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இதில் பங்கெடுத்து, முக்கிய உரை நிகழ்த்தினார்.
2025ஆம் ஆண்டில், ஷிச்சின்பிங் அவர்களை மையமாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, கட்சியின் சுய புரட்சிப் பணியில் இடைவிடாமல் ஈடுபட்டு, முழு கட்சி மற்றும் தேசியளவில் பல்வேறு இனத்தவர்களுக்குத் தலைமை தாங்கி, இன்னல்களைக் கடந்து, 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றியது. சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கம் புதிய, உறுதியான வளர்ச்சிக் காலக்கட்டத்தில் நுழைந்துள்ளது என்று இதில் வெளியிடப்பட்டது.
15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலம், சோஷலிச சமூகத்தின் நவீனமயமாக்கத்திற்கான முக்கிய காலக்கட்டமாகும் என்றும், கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்தும் பணி, புதிய நிலைமையையும் கடமைகளையும் எதிர்நோக்கும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டது.
ஷிச்சின்பிங் அவர்களை மையமாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியை மேலும் நெருக்கமாக பின்தொடர்ந்து ஒன்றுபட்டு, சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தின் மூலம், வல்லரசு கட்டுமானத்தையும் தேசிய இனத்தின் மறுமலர்ச்சியையும் விரைவுபடுத்த வேண்டும் என்று இதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
