பெய்ஜிங் மாநகரின் பண்பாடு மற்றும் சுற்றுலா ஆணையம் 2ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, டிராகன் படகு விழாவின் போது, பெய்ஜிங் மாநகருக்கு வந்த சுற்றுலா பயணங்களின் எண்ணிக்கை 82 இலட்சத்து 11 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.4 விழுக்காடு அதிகமாகும். இவ்விழாவின் போது, மொத்த சுற்றுலா செலவு 1077 கோடி யுவானைத் தாண்டி, கடந்த ஆண்டை விட 6.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதனிடையில், பாரம்பரிய பண்பாடு மற்றும் நவீனமயமான வாழ்க்கை ஒருங்கிணையும் நாட்டுப்புற பண்பாட்டு நடவடிக்கைகள், பயணிகளால் மிகவும் வரவேற்கபடுகின்றன.
இவ்விழாவின் போது, பெய்ஜிங்கிற்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 67 ஆயிரமாகும். இது, கடந்த ஆண்டை விட 35.8 விழுக்காடு அதிகமாகும். வெளிநாட்டு பயணிகளின் சுற்றுலா செலவு 72 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 41.1 விழுக்காடு அதிகமாகும்.