சிட்சாங்கில் மண்சரிவு பாதிப்பு குறித்த நிலவரம்

Estimated read time 1 min read

சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் கிர்லோங் வட்டத்தில் ஆக்ஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட மண்சரிவு குறித்து பேரிடர் மீட்புப் பணித் தலைமையகம் வெளியிட்ட செய்தியின்படி, செப்டெம்பர் 5ஆம் நாள் பிற்பகல் 6 மணி வரை, இவ்வியற்கைச் சீற்றத்தில் 43 பேர் உயிரிழந்தனர். 519 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை. உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனகர்களின் 791 குடும்பத்தினர்களுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டது.

இதுவரை மொத்தம் 2500க்கும் அதிகமானோர் மீட்புதவிப் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ட்ரோன்கள் மூலம் 5.43 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும், 555 உள்நாட்டுப் பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டனர். எல்லைப் பகுதியில் வாழும் நேபாளத்தைச் சேர்ந்த 1720 மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

பன்முறை சரிபார்ப்பின் மூலம், இச்சீற்றத்தில் தொடர்பில் இழந்தவர்களில் 23 நாடுகளைச் சேர்ந்த 261 வெளிநாட்டவர்கள் உள்ளனர். தூதாண்மை வழிமூலம் தொடர்புடைய நாடுகளின் தூதரகங்களிடம் தகவல்களை சீனா வழங்கியுள்ளது. நேரடி தொலைபேசி இணைப்பு இரவு பகலாக 24 மணி நேரமும் இயங்கப்படுகின்றது.

தவிரவும், சீன-நேபாள இயற்கைச் சீற்றத் தடுப்புத் தகவல் அறிவிப்பு முறை மூலம், சீனா நாள்தோறும் நேபாளத்திடம் வானிலை, நீரியல், பனி ஏரி மற்றும் பனி மலை ஆகியவை தொடர்பான தகவல்களைப் பகிரந்து கொள்கின்றது. நேபாளத்தின் கோரிக்கைக்கிணங்க, அந்நாட்டுக்கு சுரங்க மீட்புதவி, டிஎன்ஏ முதலிய துறைகளின் நிபுணர்களை அனுப்பியதோடும், அவசர நிவாரணப் பொருள் உதவியையும் வழங்கியுள்ளது.

You May Also Like

More From Author