உலக பொருளாதாரப் பாதிப்பைத் தவிர்க்க இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும்: சீனா

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் மார்ச் 2ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

மோதலால் ஹார்முஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல்வழி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஹார்முஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடற்பரப்பு என்பது சர்வதேச சரக்கு மற்றும் எரியாற்றல் வர்த்தகத்துக்கான முக்கிய பாதையாகும் என்றும், இப்பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பது சர்வதேச சமூகத்தின் பொது நலனுக்கு உகந்தது என்றும் தெரிவித்தார்.

மேலும், பதற்ற நிலைமை தீவிரமடைவதை தவிர்க்கவும், பிரதேச உறுதியற்ற நிலைமை உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதைத் தடுக்கவும், அனைத்து தரப்புகளும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author