பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை ஆற்றிய உரையில், இந்திய தலைவர்கள் மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அதிபர் ஜர்தாரி தெரிவித்தார்.
பிராந்திய அமைதியை விரும்புபவன் என்ற முறையில், போரை தவிர்த்து பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு அவர் இந்தியாவை வலியுறுத்தினார்.
அத்துடன், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதை “நீர்ப் பயங்கரவாதம்” என்று அவர் விமர்சித்தார்.
அரசியல் லாபத்திற்காக இந்தியா நீரை ஆயுதமாக பயன்படுத்துவதாக அவர் சாடினார்.
காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை தெற்காசியாவில் நிரந்தர அமைதி ஏற்படாது என்றும், காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து தார்மீக ஆதரவை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா போருக்கு தயாராகிறது: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜர்தாரி பரபரப்பு பேச்சு
