ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், தனது காதலியான ஜோடி ஹேடனை (Jodie Haydon) கான்பெராவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் சனிக்கிழமை (நவம்பர் 29) எளிமையாகத் திருமணம் செய்துகொண்டார்.
124 ஆண்டுகால ஆஸ்திரேலிய ஃபெடரல் அரசாங்க வரலாற்றில், பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்ட முதல் ஆஸ்திரேலியப் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை இதன் மூலம் அந்தோனி அல்பானீஸ் படைத்துள்ளார்.
அல்பானீஸ் மற்றும் ஜோடி ஹேடன் ஆகியோரின் திருமணம், ‘தி லாட்ஜ்’ (The Lodge) வளாகத்தில் ஒரு சிவில் சடங்காக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் ரஸ்ஸல் குரோவ் மற்றும் சில அமைச்சர்கள் உட்பட சுமார் 60 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆனார் அந்தோனி அல்பானீஸ்
